;
Athirady Tamil News

தாய்லாந்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிப்பு

0

பாங்காக்,

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ள டான் யாய் தாங் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் தொல்லியல் துறையினர் தீவிர அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவசாய நிலம் ஒன்றில் வெண்கலப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.

தங்க மோதிரம்
தற்போது அங்கு நடத்தப்பட்ட தோண்டுதல் பணியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் ‘புசரகீதாசா’ (பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்) என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம், இந்த மோதிரத்திற்கு சொந்தக்காரர் இந்தியாவின் பழங்கால ‘வைசியர்’ குலத்தைச் சேர்ந்த ஒரு வணிகராக இருக்கலாம் என்று தொல்லியல் துறை நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த அரிய கண்டுபிடிப்பு பண்டைய இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே இருந்த வர்த்தக தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.