;
Athirady Tamil News

ஓமன் வளைகுடா பகுதியில் சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

0

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

அமைதி ஒப்பந்தம்
அதேவேளை, பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் முயற்சியால் அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்க் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. மேலும், தங்கள் அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

தாக்குதல்
இந்நிலையில், ஓமன் வளைகுடா பகுதியில் ஹர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமனின் லிமாஹ் பகுதியில் அருகே சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.