;
Athirady Tamil News

நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் ; அஞ்சலிக்காக எடுத்துவரப்பட்ட அதிகாரிகளின் உடலங்கள்

0

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன.

அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளான எஸ். ஏ. எஸ். சந்திரவன்ச, எஸ். டி. எஸ். அபேவன்ச, ஏ. டி. தரங்க, டி. எம். ஆர். திலகசிறி, பி. என். என். தரங்க, டி. டபிள்யூ. புஷ்பகுமார மற்றும் ஆர். பி. ஆர். சஞ்சீவ ஆகியோரின் உடல்களே இவ்வாறு இறுதி மரியாதையைச் செலுத்த எடுத்து வரப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.