இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (11) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்நினைவேந்தலின் போது அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி மற்றும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.