;
Athirady Tamil News

வங்காளதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு – 44 பேர் பலி

0

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கனமழை காரணமாக அம்மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

44 பேர் பலி
இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும், கனமழை, வெள்ளத்தால் 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.