;
Athirady Tamil News

செட்டிகுளத்தில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

0

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் யானையின் தாக்குதலிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (25.07) மாலை இடம்பெற்றது. கிராமத்திற்குள் வந்த காட்டு யானை அவரை தாக்கியது. இதனால் பலத்த காயங்களுக்குள்ளாகிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஆமின் என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செட்டிகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.