;
Athirady Tamil News

தமிழ்த்தேசிய பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அம்பாள்குளம் புனரமைப்பு

0

தமிழ்த்தேசிய பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அம்பாள்குளம் புனரமைப்பு

யாழ்ப்பாணம் J/105 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள யாழ் வீரகாளியம்மன் கோவில் #அம்பாள்குளம் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தமிழ்த்தேசிய பேரவை மற்றும் ​தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் “தூய கரங்கள், தூய பிரதேசம்” எனும் உயரிய கோட்பாட்டிற்கு இணங்க, J/105 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் வீரகாளியம்மன் கோவில் அம்பாள் குளத்தினை தூய்மைப்படுத்தி புனரமைக்கும் பணிகள் தற்பொழுது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த குளமானது பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமலும் பராமரிப்பு இல்லாமலும் இருந்து பற்றைகள் வளர்ந்தும் பிளாஸ்ரிக், பொலிதீன் கழிவுகள், மதுபானபோத்தல்கள், பெருமளவான குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது. இது சுற்று வடிகால் அமைப்பினால் வெள்ளநீர் ( நன்னீர் ) தேங்கும் குளமாகவும் இது காணப்படுகின்றது.
தற்பொழுது தொடர்சியாக சிரமதான அடிப்படையில் முழுமையாக சுத்தப்படுத்தப்படுகின்றது….

​தமிழ்த்தேசிய பேரவை மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 8ம் வட்டார யாழ் மாநகரசபை உறுப்பினர் சாந்தரூபன் அவர்களின் முயற்சியிலும் ஒருங்கிணைப்பிலும் இப்புனரமைப்புப் பணி நடைபெற்று வருகின்றது.

​குறித்த களப்பணியில் ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை கந்தர்மடம் அரசடி வட்டார உறுப்பினர் அத்தான், கட்சியின் பிரமுகர் சுதாகரன், அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் கலந்து கொண்டு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.