;
Athirady Tamil News

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

0

வடமேற்கு நேபாளத்தில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இதனால் உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எவ்வித உடனடித் தகவலும் இல்லை.

தேசிய நில அதிா்வு ஆய்வு மையத்தின் தகவல்படி அதிகாலை 1.51 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது.

தொடா்ந்து, அதிகாலை 4.28 மணிக்கு ஏற்பட்ட 2-ஆவது நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4.2 அலகுகளாகப் பதிவானது. இது முகு மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் அதிா்வுகள் அண்டை மாவட்டங்களான டோல்பா, ஜும்லாவிலும் உணரப்பட்டன.

திபெத்தில் பனிமலை வெடிப்பைத் தொடா்ந்து கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் நேபாளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.