;
Athirady Tamil News

நரசிங்கர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப் பரிசில்கள் வழங்கி வைப்பு

0

நரசிங்கர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப் பரிசில்கள் வழங்கி வைப்பு

வவுனியா விசேட நிருபர்

பூந்தோட்டம் நரசிங்கர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்கொள்ளும் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி நிதியம் நிதிப் பங்களிப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கும் 150 பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் புலமைப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் சில குடும்பங்களுக்கு நிதி உதவிகளும், வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நரசிங்கர் ஆலய கல்வி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் கோ.சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், ம.ஜெகதீஸ்வரன், மேலதிக மாவட்டச் செயலாளர் நா. கமலதாசன், மாநகர முதல்வர் சு.காண்டீபன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.