;
Athirady Tamil News

கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

0
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகளை விஷமிகள் அடித்த நொறுக்கியுள்ளனர். 
பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில் , கீரிமலை இந்து மயானத்தை அண்மித்த பகுதியில் வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் ஆனா மூடிகளை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு விஷமிகள் அடித்து நொறுக்கியுள்னர்
குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகளின் இடிபாடுகள் வாய்க்காலுக்குள் காணப்படுவதானல் , மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அவற்றினை அகற்றுமாறும் , மேலும் ஏனைய மூடிகளை உடைக்காது பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்
அதேவேளை சம்பவம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் கீரிமலை வட்டார உறுப்பினர் முரளிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட உறுப்பினர் , அது தொடர்பில் தவிசாளருக்கு அறிவித்துள்ளார் .
You might also like

Leave A Reply

Your email address will not be published.