;
Athirady Tamil News

வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டது – ஷேக் ஹசீனாவின் மகன் குற்றச்சாட்டு

0

டாக்கா,

வங்காளதேசம் ஒரு தோல்வியுற்ற நாடாகவும், மற்றொரு பாகிஸ்தானாகவும் மாறிவிட்டது என ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாசெட் கூறியுள்ளார்.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவை வங்காள தேச அரசு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானாக மாறிய வங்காள தேசம்

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாசெட். வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறியதாகவும், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அங்கு சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

2023-ம் ஆண்டு இந்தியாவின் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தியபோது அல்கொய்தா தலைவர் அபு தல்கா வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் பெற்று அக்டோபர் 2024-ல் வங்காளதேச சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாத வலைப்பின்னல்களை உருவாக்குவதில் தீவிரம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நாட்டில் பயங்கரவாத வலைப்பின்னல்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வங்காளதேசம் ஒரு தோல்வியுற்ற நாடாகவும், மற்றொரு பாகிஸ்தானாகவும் மாறியது” என்றார்.

சாஜிப் வாசெட் இவ்வாறு தொடர்ந்து பேசி வருவது வங்காள தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காள தேசத்தின் சுதந்திரத்துக்கான போரில் களமிறங்கிய இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி வங்காள தேசம் சுதந்திரம் பெறுவதற்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.