தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.