;
Athirady Tamil News

காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

0

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

காஸா நகரிலுள்ள மாநகராட்சிப் பூங்கா அருகே, இடம்பெயா்ந்த மக்கள் கூட்டமாக இருந்த பகுதியில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். மேற்கு காஸா நகரின் டெல் அல்-ஹவா பகுதியில் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு வான்வழித் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் கொண்டு வரப்பட்ட போா்நிறுத்தத்துக்கு பிறகும் இஸ்ரேல் தொடா்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா். எனினும், ஹமாஸ் படையினரைக் குறிவைத்தே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கிரீஸுடன் 350 கோடி டாலா் பாதுகாப்பு ஒப்பந்தம்

ஜெருசலேம்/ஏதென்ஸ், ஆக. 31: கிரீஸ் நாட்டில் பல அடுக்கு வான்வழிப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்காக, அந்நாட்டுடன் 350 கோடி டாலா் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இஸ்ரேல் திங்கள்கிழமை கையொப்பமிட்டது.

ராணுவத்தை நவீனமயமாக்கும் விரிவான திட்டத்தின்கீழ் கிரீஸ் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இது கிரீஸ் நாட்டுடனான இஸ்ரேலின் மிகப் பெரிய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த இஸ்ரேல் வரலாற்றின் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.‘அகிலிஸ் ஷீல்ட்’ எனும் இந்த ஒப்பந்தத்தின்கீழ், இஸ்ரேலின் ரஃபேல் நிறுவனம் தயாரிக்கும் ‘டேவிட்ஸ் ஸ்லிங்’ மற்றும் ‘ஸ்பைடா்’ அமைப்புகள், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் தயாரிக்கும் ‘பராக் எம்எக்ஸ்’ அமைப்பு, மற்றும் வான்வழி கண்காணிப்புக்கான எம்எம் ஆா் ரேடாா்கள் ஆகியவற்றை கிரீஸுக்கு இஸ்ரேல் வழங்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.