;
Athirady Tamil News

நேபாள வெள்ளம்: 1,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை

0

காத்மண்டு,

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் வெள்ளம்

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமய மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26ம் தேதி திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இமயமலையில் பனிப்பாறை உடைந்து திபெத் வழியாக நேபாளத்தில் பாயும் போடேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் உள்நாட்டு மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

1,003 பேர் பலி

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, வெள்ள பாதிப்பில் சிக்கிய 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணியில் நேபாளம், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.