;
Athirady Tamil News

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு ; மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

0

சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படக்கூடும்.

இதனிடையே, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பரப்புகளில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.