;
Athirady Tamil News

யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்; நித்திரைக் கலக்கத்தால் 10 அடி பாய்ந்தது

0

யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்றுகொண்டிருந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த இருவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள நிலையில் , கார் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.