;
Athirady Tamil News

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்

0
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டனர்.
இதன்போது, மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவர் விடுதி, நோயாளர் விடுதிகள் மற்றும் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றை அமைச்சர் மற்றும் ஆளுநர் நேரில் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் அத்தியட்சகர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதியர் உத்தியோகத்தர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் பங்கேற்று, மருத்துவமனையின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இக்கண்காணிப்பு பயணத்தின்போது கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராசா, வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.