அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் நேற்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை மீறி ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்துள்ளதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.