அனோஜனின் விடுதலைக்காகச் சிறப்பு இறை பிரார்த்தனை(video /photoes)
காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் அருகில் 2001 O/L & 2004 A/L நண்பர்கள் குழு ஒழுங்கமைப்பில் நிகழ்வு
பாறுக் ஷிஹான்
video link-https://fromsmash.com/
“எம் மண்ணின் மைந்தனை மீட்டிட கை கோர்ப்போம் வாரீர்” எனும் உணர்வுப்பூர்வமான அழைப்பின்கீழ், காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் 2001 O/L மற்றும் 2004 A/L (JALU) கல்விப் பிரிவு நண்பர்கள் குழுவினால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இப் பிரார்த்தனை நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு, அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி அவரை உயிருடன் நாட்டிற்கு மீட்டு வருவதற்குச் சவூதி அரசுக்கும் இலங்கை அரசுக்கும் ஆதரவாகத் தீபமேந்தி இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
