;
Athirady Tamil News

காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

0

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், காரைநகர் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது..

விழாவின் ஆரம்ப நிகழ்வாக காரைநகர் பிரதேசத்தின் கலை ஆற்றுகைகளுடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து, கிழவன்காடு கலாமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் குழு இசை நிகழ்வுகள் இடம்பெற்று, ஒரே அரங்கில் பல்வேறு கலை வடிவங்கள்
பண்பாட்டுப் பெருவிழாவில் காரைநகர் பிரதேசத்தின் பாரம்பரிய கலைகளையும், கலைஞர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில், 2026ஆம் ஆண்டுக்கான “கலைஞானச்சுடர்” விருதுகளும் “கலைமுகை” விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் தர்சினி நிதர்சனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபனும் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கிருஸ்ணானந்தன் மாலினி, காரைநகர் கிராமியக் கலை இளங்கலைஞர் சற்குணநாதன் சத்தியராஜ் மற்றும் காரைநகர் நாடகத்துறை முதுகலைஞர் திருநாவுக்கரசு பிரபாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.