தியாக தீபத்திற்கு காவடி
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு இளைஞர் ஒருவர் தூக்கு காவடி எடுத்து , தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அதன் ஒரு கட்டமாக நினைவாலயம் அமைந்துள்ள பகுதிக்கு இளைஞன் ஒருவர் தூக்கு காவடி எடுத்து வந்திருந்தார்.
அதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இருந்து மாணவர்கள் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்திற்கு பேரணியாக சென்று இறுதி நாள் அஞ்சல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்துடன் , யாழ்ப்பாணத்தின் ஏனைய பாகங்களில் இருந்தும் , கிளிநொச்சியில் இருந்தும் தியாக தீபத்தின் திருவுருவ படங்கள் தாங்கிய ஊர்திகள் நினைவாலயத்தை வந்தடைந்திருந்தது.
