;
Athirady Tamil News

இலங்கையில் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

0

வீடுகள், வணிக வளாகங்கள் அல்லது ஏனைய சொத்துக்களை வாடகைக்கு விடுவதற்கு முன்னர், வாடகைக்கு அமர்த்துபவர்களின் பின்னணியை முறையாகச் சரிபார்த்துப் பொறுப்புடன் செயற்படுமாறு சொத்து உரிமையாளர்களுக்குப் பொலிஸார் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களிலிருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுவதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள்
வாடகைக்கு எடுக்கப்படும் சொத்துக்களில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், நாட்டின் நடைமுறைச் சட்டத்திற்கு அமைவாக அதன் உரிமையாளர்களும் கடுமையான சட்டரீதியான விளைவுகளையும் தண்டனைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

எனவே, தமது சொத்துக்களை வாடகைக்கு விடுவதற்கு முன்னர் வாடகைதாரர்களின் அடையாள அட்டைகள் மற்றும் பின்னணி விபரங்களைச் சரிபார்ப்பதுடன், சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.