;
Athirady Tamil News

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்; மக்கள் அவதி

0

பாங்காக்,

தாய்லாந்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அவதியடைந்தனர்.

கனமழை

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பாங்காக்கில் உள்ள 50 மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதியடைந்துள்ளனர். அதேவேளை, பாங்காக் சுற்றுலா தளமாக திகழ்வதால் தாய்லாந்துக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.