;
Athirady Tamil News

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் எச்சரிக்கை

0

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இன்று (28) காலை 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும்.

இதன்படி, குறித்த பகுதிகளின் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.