;
Athirady Tamil News

நகைக்கடை ஆடை விற்பனை நிலையங்களில் திருடர்கள் கைவரிசை!

0

மன்னார் பஜார் பகுதியில் உள்ள நான்கு வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் இன்று (01) அதிகாலை இரு திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

இரண்டு நகைக்கடைகள் மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களிலேயே இவர்கள் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையங்களின் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கிய திருடர்கள், இந்தத் திருட்டுச் சம்பவத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை வர்த்தக நிலையங்களைத் திறந்து பார்த்த போதே, கடைகளுக்குள் திருடர்கள் நுழைந்த விஷயம் உரிமையாளர்களுக்குத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நகைக்கடை மற்றும் ஆடை விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.