;
Athirady Tamil News

அதிகரிக்கும் போர் பதற்றம்.. மத்திய கிழக்கில் 20 ஆயிரம் வீரர்களுடன் 3 போர்க்கப்பல்களை நிறுத்தும் அமெரிக்கா

0

வாஷிங்டன்,

9 ஆயிரம் அதிரடிப்படை வீரர்கள் அடங்கிய 3-வது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை, அமெரிக்கா மத்திய கிழக்குக்கு அனுப்பி உள்ளது.

ஈரானுக்கு தொடர்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா முடக்கியுள்ளதால், இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஈரானுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு, உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

3-வது விமானம் தாங்கி போர்க்கப்பல்

பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவாகவும், ஈரானுக்குப் பாடம் புகட்டவும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தற்போது அதிரடிப் படைப்பிரிவை களமிறக்கியுள்ளது. இதன்படி, சுமார் 7 ஆயிரம் கடற்படை வீரர்கள் மற்றும் 2 ஆயிரம் கடற்படைப்பிரிவு வீரர்கள் என 9 ஆயிரம் அதிரடிப்படை வீரர்கள் அடங்கிய 3-வது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை அமெரிக்கா மத்திய கிழக்குக்கு அனுப்பி உள்ளது.

உச்சக்கட்ட பரபரப்பு

இதனால் அப்பகுதியில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம் ஆக உயரவுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3-ந்தேதி வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, ஈரான் மீது பிரமாண்ட வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என டிரம்ப் வெளிப்படையாக எச்சரித்துள்ளார். இந்த அதிரடி ராணுவ நகர்வு உலகப் போருக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுவதால் சர்வதேச எல்லையில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.