யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் சிறப்பான சேவைக்கு பாராட்டு
;
உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் தேசிய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், சிறப்பாகச் செயற்பட்ட மருத்துவமனைகள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட மருத்துவமனையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.