;
Athirady Tamil News

13 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

0

இலங்கையின் 13 மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (21) நண்பகல் 12 மணி முதல் நாளை (22) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, குருநாகல், காலி, மாத்தறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, உடுநுவர, கங்க இஹல கோரளை, தும்பனை, பஸ்பாகே கோரளை, பாதஹேவாஹெட்ட, பூஜாபிட்டிய, கண்டி, யட்டிநுவர மற்றும் ஹாரிஸ்பத்துவ ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் அலவ்வ, இப்பாகமுவ, உடுபத்தாவ, கட்டுபொத்த, குருநாகல், குளியாப்பிட்டிய, நாரம்மல, நிக்கவரெட்டிய, பன்னல, பொல்கஹவெல, மஹவ, மாவத்தகம, ரிதீகம மற்றும் வாரியப்பொல உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை, எல்பிட்டிய, கரந்தெனிய, தவலம, நாகொடை, நியாகம, நெலுவ, பத்தேகம, பலப்பிட்டிய, பெந்தோட்டை, யக்கலமுல்ல மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளும் இதில் அடங்குகின்றன.

மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ, கொட்டபொல, பஸ்கொட, பிடபெத்தர மற்றும் முலட்டியான ஆகிய பகுதிகளுக்கும், பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம, பண்டாரவளை, வெலிமடை, ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பிரதேசத்திற்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும். இந்த எச்சரிக்கை செம்மஞ்சள் நிறத்திலான ‘தயாராக இருங்கள்’ (Be Prepared) மட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது பலத்த மின்னல் தாக்கம், கடும் காற்று மற்றும் கனமழை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து பாதுகாப்பான கட்டடங்களுக்குள் இருக்குமாறும், தனிமையான மரங்களின் கீழ் நிற்பதையும் நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நடமாடுவதையும் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.