;
Athirady Tamil News

8 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய 4 விண்வெளி வீரா்கள்

0

சர்வதேச விண்வெளி மையத்தில் (ISS) சுமார் எட்டு மாதங்கள் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுத்த நான்கு விண்வெளி வீரர்கள், வியாழக்கிழமை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பிய அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்களான ஜெசிகா மேயர், ஜாக் ஹாத்வே, பிரான்ஸைச் சேர்ந்த சோஃபி அடெனோ மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி ஃபெட்யாவ் ஆகிய நால்வரும் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் கடற்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் அவர்களின் விண்கலம் இறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்ட அவர்கள், தமது நீண்டகால விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.