;
Athirady Tamil News

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

0

ஸ்டாக்ஹோம்,

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 5-ந்தேதி தொடங்கியது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘தமிழ் வம்சாவளி’ நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வம்சாவளி

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, 1890-களில் கரும்பு வெட்டும் கூலியாக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர்களின் வழித்தோன்றல் ஆவார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் பிறந்த நவநீதம் பிள்ளை, ஆழமான கட்டமைப்பு ரீதியான பாகுபாடு, பிரிவினை மற்றும் புறக்கணிப்பை எதிர்கொண்டு ஒரு வழக்கறிஞராகவும் சட்ட முன்னோடியாகவும் ஆனார். இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக நின்ற நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட உதவி செய்தவர்.

சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி

நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் ஐகோர்ட்டிலும், ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகவும், சமீபகாலம் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசம் குறித்த ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் அவர் இருந்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச நீதிமன்ற வழக்குகளில், சட்ட நடவடிக்கைகள் போர் மற்றும் வன்முறைச் செயல்களைத் தடுக்க உதவும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். சர்வதேச சட்டத்தின் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் அவர் பங்களித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.