;
Athirady Tamil News

வவுனியாவில் பிரஜா சக்தி ஊடாக 114 அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க 536 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் உபாலி பன்னலிகே

0

வவுனியாவில் பிரஜா சக்தி ஊடாக 114 அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க 536 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் உபாலி பன்னலிகே

வவுனியா மாவட்டத்தில் பிரஜா சக்தி குழுக்களின் ஊடாக 114 அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க 536 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படாடுள்ளதாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னலிகே தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் பிரஜா சக்தி குழு உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையில் வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தேரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 102 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில், பிரஜா சக்தி குழுக்களின் ஊடாக 114 அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 536 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அதன் நோக்கங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலாளர் என். கமலதாசன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும், கிராம மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள பிரஜா சக்தி குழுக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.