;
Athirady Tamil News

ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

0

புதுடெல்லி:

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.

தாக்க வேண்டியுள்ளது

அமெரிக்காவின் புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை அமெரிக்கா ஏற்கனவே அழித்துவிட்டது. ஈரானில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு இலக்குகளை மட்டுமே தாக்க வேண்டியுள்ளது. அவற்றை 10 நிமிடங்களில் அழித்துவிட முடியும். ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய ‘பிகாக்ஸ் மவுண்டன்’ பகுதியையும் தாக்க வேண்டியுள்ளது’ என்றார்

டிரம்ப் ஆதங்கம்

இந்த வாரமே ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இது என்ன முட்டாள்தனமான கேள்வி? அப்படி ஒரு திட்டம் இருந்தால் அதை உங்களிடம் கூறுவேனா?” என்று டிரம்ப் பதிலளித்தார். அதேநேரத்தில், ஈரானுடனான பேச்சுவார்த்தை நன்றாக நடைபெற்று வருவதாகவும், ஆனால் அந்த நாடு நம்பகத்தன்மை இல்லாதது என்றும் டிரம்ப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மொஜ்தபா கமேனி எச்சரிக்கை

இதற்கிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி, அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாகவும், வலுவான வகையிலும், எல்லைகளைக் கட்டுப்படுத்தாத வகையிலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.