;
Athirady Tamil News

மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா ஐ.ஓ.சி

0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு இணையாக உயர்த்தியுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. எவ்வாறாயினும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டு 570 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

இதுதவிர அண்மையில் அதிகரிக்கப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.