;
Athirady Tamil News

நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு பற்றாக்குறை! வெளியான முக்கிய அறிவிப்பு

0

அடுத்த வாரம் வரும் கப்பல்களில் இருந்து பெறப்படும் எரிவாயு மூலம் முதலில் மூன்று மில்லியன் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று லாஃப்ஸ் வாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

எரிவாயுவுடன் இரண்டு கப்பல்கள் அடுத்த வாரம் வரவிருப்பதாகவும், அது முதலில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் திறைசேரி செயலாளருடன் கலந்துரையாடல்
உலகில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக வாயு இறக்குமதியில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளமை இந்த வாயு பற்றாக்குறைக்கு முக்கிய தடையாக உள்ளது என்றும் விளக்கமளித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை முனையத்தில் இருந்து வாயுவை விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே இது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி மற்றும் திறைசேரி செயலாளருடன் கலந்துரையாடி, விரைவான தீர்வை எட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.