;
Athirady Tamil News

ஜரோப்பாவில் வெடித்த வன்முறைப் போராட்டங்கள் ; புலம்பெயர்ந்தோர் மீது பலி போடும் ஜேர்மன் அரசாங்கம்

0

ஜெர்மன் உள்ளிட்ட ஜரோப்பிய நாடுகளில் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதற்கு இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் குழுக்களே காரணம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று பிற்பகல் அமைதியான முறையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள், மாலை நேரத்தில் வன்முறையாக மாறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது போராட்டக்காரர்கள் கட்டடங்களின் ஜன்னல்களை உடைத்ததுடன், கடைகளையும் சூறையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸார் நீர்த்தாரைப் பீரங்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

பெர்லின், கொலோன் மற்றும் ஹாம்பர்க் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எட்டுக்கும் மேற்பட்ட நகரங்களில் பெருமளவிலான கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெர்மனியின் உள்துறை அமைச்சரும், ஆளும் கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் உறுப்பினருமான அலெக்சாண்டர் டோப்ரின்ட், புலம்பெயர்ந்தோர் சமூகத்தைச் சேர்ந்த சில குழுக்கள் இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் ஏனைய தீவிர இடதுசாரிக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், போராட்டங்களில் ஈடுபட்ட அனைவரையும் ஒரே தரப்பாகக் கருத முடியாது என்பதுடன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் குறித்த விபரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.