;
Athirady Tamil News

சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘Global Skills Hub’ மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையம் திறப்பு

0
video link-
 
https://fromsmash.com/dQr-N83eQk-dt

உலகளாவிய தரத்திலான மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் (JMH DIAGNOSTIC & SPECIALISTS INFIRMARY) மத்திய கிழக்கு நாடுகளுக்கான நவீன மருத்துவ பரிசோதனை நிலையமும் ‘GLOBAL SKILLS HUB’ திறன் அபிவிருத்தி மையமும் இன்று மிகச் சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காகச் செல்வோர் மற்றும் பிராந்திய பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உலகளாவிய அளவில் உயர் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் இப் புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் முகாமையாளர் யூ.எல்.எம். றியாஸ்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை குழுமத்தின் தவிசாளரும் பிரபல வைத்திய நிபுணருமான டொக்டர் றிஸான் ஜெமீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தினை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் பிரதம அதிதி உரையாற்றுகையில்:

இப் புதிய மையத்தின் வருகையானது பிராந்தியத்தின் மற்றும் நாட்டின் சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரும் பங்களிப்பாக அமையும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணி நிமித்தம் செல்ல முனையும் நபர்களுக்கான மருத்துவச் பரிசோதனைத் தேவைகளை மிக விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் பூர்த்தி செய்ய இது வழிவகுக்கும்.மேலும், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் நோயாளர்களுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்குமான மருத்துவச் சேவைத் தேவைகளுக்கும் இதுவொரு முக்கிய ஆதரவாக விளங்கும் எனக் குறிப்பிட்டார்.

இக் கோலாகல திறப்பு விழா நிகழ்வில் சுகாதாரத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.