;
Athirady Tamil News

ஹோர்முஸ் அருகே அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

0

ஹோர்முஸ் நீரிணையின் அருகிலுள்ள தீவுப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கேஷ்ம் தீவின் மீது ஏவப்பட்ட அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக ட்ரோனை ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டுவீழ்த்தியதாக, ஈரானிய புரட்சிகர காவல் படை நேற்று (நவ. 6) அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் வெளியான இந்தச் செய்தி குறித்து அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கெனவே, கத்தார் மூலமாக அமெரிக்காவிடம் 7 நிபந்தனைகள் உடன் கூடிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அனுப்பியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இச்சூழலில், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

முன்னதாக, அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சித் தோல்வி அடைந்ததற்கு ஈரான் மீதான போர்தான் காரணம் என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.