;
Athirady Tamil News

அமெரிக்க இடைத்தேர்தல் தோல்வி ; உதவி அட்டார்னி ஜெனரல் ராஜினாமா

0

நவம்பர் 3 நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் உடைய குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மை இழந்துள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் அரசாங்கத்தில் குடிமை உரிமைகள் பிரிவின் தலைவராகவும் உதவி அட்டார்னி ஜெனரலாகவும் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் ட்ரம்பின் தீவிர ஆதரவாளருமான ஹர்மீத் கவுர் தில்லன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய முதல் மூத்த அதிகாரி இவரே ஆவார். அட்டார்னி ஜெனரல் டாட் பிளான்ச் தனது எக்ஸ் பக்கத்தில் ஹர்மீத் தில்லனின் ராஜினாமாவை அறிவித்தார்.

அவரது பதிவில், “அவர் (ஹர்மீத்) ஒவ்வொரு அமெரிக்கரின் குடிமை உரிமைகளையும் பாதுகாத்தார். அவர் அச்சமின்றி பாரபட்சமின்றி சட்டத்தை அமல்படுத்தினார்.

எங்கள் துறையின் சார்பாக, அவரது சேவைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தனது ராஜினாமாவை சமர்ப்பித்ததாகவும், ஆனால் தேர்தல் முடியும் வரை அப்பதவியில் தொடருமாறு டிரம்பின் தலைமை ஊழியர் சூசி வைல்ஸ் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஹர்மீத் தில்லன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.