;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

நாடளாவிய ரீதியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையென போராட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் உட்புறப் பணிகள் பெரும்பாலானவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச சேவைகள் பலவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி அநுராத செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் மத்திய அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பே இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

அதேவேளை தமது கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.