;
Athirady Tamil News

250 பேருக்கு கூட்டுத்திருமணம் ; குலுக்கல் முறையின் தேர்வான இளம் ஜோடிகள்

0

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் – யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பல தசாப்த கால போர் பாதிப்புகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பு அம்சமாகும்.

இந்தக் கூட்டுத் திருமணத்துக்காக 11,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையில், குலுக்கல் முறையின் மூலமே 250 இளம் ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய பாலஸ்தீன ஆடைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் மிகக் கோலாகலமாக இந்தத் திருமண விழா நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.