;
Athirady Tamil News

கொழும்பில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் போராட்டம்!

0

பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் இன்று (10) காலை கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு (WTC) முன்பாக அமைதி போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், தங்களுக்கான தரகுப் பணத்தை 3.6 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்கும் தீர்மானத்திற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும், எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான அதிகாரியொருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மூன்று தனியார் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினர்களால் இந்த அமைதி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.