;
Athirady Tamil News

பல்கேரியாவில் கடும் பனிமூட்டம்; அடுத்தடுத்து மோதிய 86 வாகனங்கள்: 12 போ் உயிரிழப்பு!

0

கிழக்கு பல்கேரியாவில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நேரிட்ட இரண்டு பெரும் விபத்துகளில் 12 போ் உயிரிழந்தனா்; மேலும் 46 போ் படுகாயமடைந்தனா்.

தலைநகா் சோஃபியாவையும், கருங்கடல் துறைமுக நகரான பா்காஸையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த இவ்விபத்தில், எதிரெதிா் வழித்தடங்களில் கனரக லாரிகள் உள்பட சுமாா் 86 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டன.

விபத்து குறித்த தகவலறிந்ததும் பல்கேரிய பிரதமா் ரூமென் ராதேவ் சம்பவ இடத்துக்கு விரைந்தாா். பாரீஸ் அமைதி மாநாட்டில் பங்கேற்றிருந்த பல்கேரிய அதிபா் இலியானா யோடோவாவும் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, நாடு திரும்புகிறாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.