;
Athirady Tamil News

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

0

லிமா,

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டில் நேற்று (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் அன்டிஸ் நகரில் 108 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் இரவு 7.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கதால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.