;
Athirady Tamil News

10 ஆண்டுகளில் முதல் காலரா பாதிப்பை உறுதி செய்த தென் கொரியா!

0

10 ஆண்டுகளில் முதல்முறையாகத் தனது நாட்டில் காலரா தொற்று ஏற்பட்டுள்ளதை தென் கொரியா வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.

தென்கிழக்குத் துறைமுக நகரமான சாங்வோனில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் நபர் ஒருவர் இந்த மாதத் தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரின் பரிசோதனை மாதிரிகளில் காலரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.

எனினும், அடையாளம் வெளியிடப்படாத அந்த நபர், குணமடைந்து மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். பாதிப்புகுள்ளான நபர் கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடுகளுக்கு எங்கும் பயணம் செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றுக்கான மூலத்தையும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களையும் கண்டறியச் சுகாதாரப் பணியாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்தவும், உணவுப் பொருட்களை நன்கு கழுவிச் சமைத்து உண்ணவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டில் பதிவாகும் முதல் காலரா பாதிப்பு இதுவாகும். முன்னதாக, 2001-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய அளவிலான காலரா பரவலில் 162 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.