;
Athirady Tamil News

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்; சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

0

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்; சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இன்று (23) திங்கட்கிழமை மதியம் வீதியில் இறங்கி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உத்தியோகத்தர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் நியாயமான சம்பள அளவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், விசேட தரத்துடன் கூடிய முறையான பதவி உயர்வுத் திட்டத்தை வழங்குதல் மற்றும் தற்போதைய வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை உடனடியாக வழங்குதல் ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.