யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!
எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) யாழ்ப்பாணம் - தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள்…
நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் : மாவை சேனாதிராஜா
தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(18.10.2023) நடைபெற்ற ஊடகசந்திப்பில் இந்தக் கருத்தினை…
நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி
சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்பட்ட நாகை - யாழ்ப்பாணம்(காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல் சேவை நாளை மறுநாளுடன்(20) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இலங்கை இந்திய கப்பல் சேவையானது…
வெள்ளத்தில் மூழ்கிய காலி – மாத்தறை பிரதான வீதி
நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும், மிரிஸ்ஸ நகரின் பல வர்த்தக…
மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள்
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425…
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் : ஐ.நாவிடம் சஜித் கோரிக்கை
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவர அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக போரை நிறுத்துங்கள்
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய…
ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு காசல் வீதி வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்…
காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் வெறுக்கத்தக்க போர்க்குற்றம்! சுமந்திரன் கண்டனம்
காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தனது டுவிட்டர் பதிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது மிகவும் வெறுக்கத்தக்க…
பொது முடக்கத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரும் எட்டு கட்சிகள்
பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிக்கையை…
சுவிஸ் தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழர்: வெற்றி பெற்றால் வரலாற்று சாதனை
சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான சந்தியாப்பிள்ளை கபிரியேல் போட்டியிடவுள்ளார். இவர் இலங்கை மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22 ஆம் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற இருக்கும்…
முப்பத்தாறு வருட கல்விப் பணியாற்றி ஓய்வு பெறும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜெயக்கொடி டேவிட்…
கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்தில் காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளராக தற்போது சேவையாற்றி வரும் ஜெ.டேவிட் அவர்கள் சொறிக்கல்முனை கிராமத்தில் யுவான்பிள்ளை கிறகோரி, செபதேயு றோஸ்மேரி தம்பதியினரின் ஐந்தாவது பிள்ளையாக…
யாழ்ப்பாண அதிபர் மாளிகை கைமாற்றம் : கிளம்பியது கடும் எதிர்ப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை SLITக்கு மாற்றும் தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது நாடாளுமன்றின் அந்தஸ்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் நிறைவேற்று…
பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்
ஹோமாகமவில் பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம,…
சட்டத்தரணியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த கைதி
கலகெதர நீதவான் நீதிமன்ற அறையின் கதவு திறக்கப்பட்டதும் அதிலிருந்து கைதி ஒருவர் தப்பியயதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளதாகவும்…
பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: ஒரே ரயில் நிலையத்தில் 4,438 போ் சிக்கினா்
மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் நகர ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 4,438 போ் பரிசோதகா்களிடம் சிக்கினா்.
அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.16.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே வரலாற்றில் ஒரு…
இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவா நிர்வாக முடக்கல் போராட்டம்…
”சட்ட ஆட்சி” “ஜனநாயகம்” ”மனித உரிமை” ”நீதித்துறையின் கௌரவம்” ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிர்வாக முடக்கல் போராட்டத்தை (ஹர்த்தால்) நடத்தவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…
மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (17) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம்…
அடுத்த தேர்தலில் சஜித்துக்கும், அநுரவுக்கும்தான் போட்டி
அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில்தான் போட்டி காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு தான் மக்கள் மத்தியில்…
ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி துண்டு பிரசுரம் விநியோகம்
வடக்கு,கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாளுக்கு ஆதரவு கோரி யாழில் இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள இக் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க்க் கோரி…
கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு ஏற்பட்ட சிக்கல்
கனடாவில் அடகு கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அடகு கடன் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பதற்கு…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அகற்றம்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சட்ட மூலம் ஒக்டோபர் மூன்றாம் திகதி ஒழுங்குபத்திரத்தி;ல் சேர்க்கப்பட்டது என…
சட்ட நடவடிக்கைக்கு தயார் : விவசாய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
ஒரே பூச்சிக்கொல்லி மருந்தை வெவ்வேறு பெயர்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நுரைச்சோலை மற்றும் கற்பிட்டி பிரதேச விவசாய…
யாழ் பேருந்து நிலையத்தில் அச்சத்தை ஏற்படுத்திய நடவடிக்கை : மேலும் ஜவர் கைது
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: முடியாத பிரச்சனை
தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக மீனவர்கள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த…
மென் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற…
விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்; இரு பொலிஸார் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து துபாயிலிருந்து வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதான பொலிஸார் ஒருவரின் வீட்டில் வைத்து அந்த வர்த்தகரிடமிருந்த…
இலங்கையில் லியோ படத்தை திரையிட வேண்டாம் ; தமிழ் எம் பிக்கள் விஜய்க்கு கடிதம்?
வடக்கு கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்…
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பு
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
இந்தியா மீது தான் அதீத நம்பிக்கை: பிரச்சினையில் தலையிடுவதை வரவேற்கிறோம்! இஸ்ரேல்
இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் தெரிவித்துள்ளார் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் 11-வது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல்…
ATM உடைத்து கொள்ளை ; மூவர் கைது
புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்திலுள்ள வங்கியொன்றில் ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி…
நிலையான விவசாயத்தை நோக்கி இலங்கை இடம்பெயர வேண்டும் : ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டம்
இலங்கை உணவுப் பாதுகாப்பிற்காக உடனடியாக நிலையான விவசாயத்தை நோக்கி இடம்பெயர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.
உலக உணவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அந்த அமைப்பின்…
இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்
கிருலப்பனையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு…
திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(17.10.2023) இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் : வெளியான மகிழ்ச்சி தகவல்
ஓய்வூதியத் திட்டம்
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இதற்கான பிரேரணை நிதி அமைச்சிடம்…