தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கையில்,ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருமுனை போட்டியை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 60 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தற்போது 60 இடங்களில் முன்னிலை
இந்த திடீர் மாற்றத்தால் ஆளும் கட்சியான திமுக 51 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 39 இடங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரின் வாக்குகள் அடங்கிய தபால் வாக்குகளில் ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய முன்னிலையைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
தவெக-வின் இந்த அசுர வளர்ச்சி, குறிப்பாக நட்சத்திரத் தொகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் முன்னணித் தலைவர்களின் பின்னடைவு ஆகியவை தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதை காட்டுகின்றன.
மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் முதல் தேர்வாக தவெக உருவெடுத்துள்ளதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன தவெக தனது இந்த முன்னிலையை இறுதிவரை தக்கவைக்குமா அல்லது திராவிடக் கட்சிகள் மீண்டும் எழுச்சி பெறுமா என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
தேர்தல் முடிவுகள் 2026, தவெக முதலிடம், திமுக இரண்டாம் இடம், அதிமுக 39 இடங்கள், தபால் வாக்கு நிலவரம், தமிழக அரசியல் அதிரடி, விஜய் அரசியல் வருகை.