;
Athirady Tamil News

பிலிப்பின்ஸில் மேயான் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

0

பிலிப்பின்ஸில் மேயான் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிலிப்பின்ஸ் நாட்டின் அல்பே மாகாணம், லெகாஸ்பி நகருக்கு அருகே மேயான் எரிமலை அமைந்துள்ளது. 2,640 மீட்டர் உயரமுடைய இந்த எரிமலையானது பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மயோன் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மணிலாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள ஆறு கிலோமீட்டர் சுற்றளவிலான அபாயப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எரிமலை ஆய்வு நிறுவனம் அதன் ஐந்து நிலைகளைக் கொண்ட எச்சரிக்கை அளவீட்டில் நிலை 3 எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேசமயம் நிலச்சரிவு மற்றும் எரிமலைக்குழம்பு பாய்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறையின் தகவல்படி, தற்போது சுமார் 1,500 குடும்பங்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இதனிடையே சனிக்கிழமை அல்பே மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் அதிகப்படியான சாம்பல் மழை பொழிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.