ராஜகிரிய கைதான 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் அதிரடி
இராஜகிரிய பகுதியில் நேற்று (03) கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டினரை மே 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகிரிய – மெதவெலிகட பகுதியில்வாடகைக்கு வீடு எடுத்து இணைய மோசடிகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.