தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக! விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதிலிருந்தே பல இடங்களில் தவெக முன்னிலைக்கு வந்தது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தவெக 57 இடங்களிலும் அதிமுக 48 தொகுதிகளிலும் திமுக 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
ஆனால், பொதுவாக காலை 10 மணி நிலவரப்படி தவெக – 100 இடங்களிலும் அதிமுக 81 இடங்களிலும் திமுக 51 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ள நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விஜய் வீட்டைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தபால் வாக்குகள் தொடங்கி பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முதல் சுற்று நிலவரம் வெளியாகியிருக்கிறது.